85-வது ஆஸ்கர் விருதுகளுக்கானப் பரிந்துரைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'லைஃப் ஆஃப் பை' படத்துக்கு 11 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறகு, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் சிறப்பு சேர்க்கும் வாய்ப்பு, பாம்பே ஜெயஸ்ரீ மூலம் கிடைத்துள்ளது.
சிறந்த 'ஒரிஜினல் சாங்' இசைப் பிரிவில் லைஃப் ஆஃப் பை படத்துக்காக இசையமைப்பாளர் மைக்கேல் டன்னா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. " 'பை'யின் தாலாட்டு"ப் பாடலை பாம்பே ஜெயஸ்ரீ எழுதிப் பாடியிருக்கிறார்.


