விஸ்வரூபம்' படம் ஜனவ்ரி 25ம் தேதி அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் வெளியாகும் என கமல் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பது " 'விஸ்வரூபம்' திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.
என் தொலைநோக்கை புரிந்துகொண்டு DTH என்னும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்த சகோதர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி. " என்று குறிப்பிட்டுள்ளார்.


