இன்னமும் தோற்கடிக்க முடியாத1996 உலகக்கிண்ண அணி - Funbattileader
Headlines News :

Football News

World News

Home » » இன்னமும் தோற்கடிக்க முடியாத1996 உலகக்கிண்ண அணி

இன்னமும் தோற்கடிக்க முடியாத1996 உலகக்கிண்ண அணி

1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த அணி, இன்னமும் தாங்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதை நிரூபித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கண்காட்சிப் போட்டியொன்றில் அவ்வணி இலங்கைப் பதினொருவர் அணியை 7 விக்கெட்டுக்களால் இலகுவாகத் தோற்கடித்தது.

பேபி ஷெரமி நிறுவனத்தின் பிக் ஹார்ட் திட்டத்திற்கு நிதிசேகரிக்கும் முகமாக நடாத்தப்பட்ட நிதிசேகரிப்புப் போட்டியிலேயே 1996 உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட அணி வெற்றிபெற்றது.

கொழும்பு என்.சிசி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற 1996 உலகக்கிண்ண அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைப் பதினொருவர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கைப் பதினொருவர் அணி சார்பாக ஹேமந்த தேவப்பிரிய 30 ஓட்டங்களையும், ஹேமந்த விக்ரமதுங்க 30 ஓட்டங்களையும், எரிக் உபஷாந்த 25 ஓட்டங்களையும், சாமர சில்வா 23 ஓட்டங்களையும், சிதாத் வெத்தமுனி 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் 1996ம் ஆண்டு உலகக்கிண்ண அணி சார்பாக அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க, அரவிந்த டீ சில்வா, உபுல் சந்தன, சனத் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

138 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 1996 உலகக்கிண்ண அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ரொமேஷ் களுவிதாரண 31 பந்துகளில் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், அர்ஜூன ரணதுங்க 28 பந்துகளில் ஆட்டமிழக்காது பெறப்பட்ட 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கைப் பதினொருவர் அணி சார்பாக அஷோக்க டீ சில்வா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக ரொமேஷ் களுவிதாரண தெரிவானார்.

1996 உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் முத்தையா முரளிதரன், குமார் தர்மசேனா இருவரும் இப்போட்டியில் கலந்து கொண்டிருக்கவில்லை.

Share this article :

Advertise

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Funbattileader - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya