வத்திக்கானில் நடந்த கூட்டம் ஒன்றின் போது 85 வயதான போப் அவர்கள் இந்த அறிவிப்பை லத்தீன் மொழியில் வெளியிட்டார்.
அவர் தனது போப் பதவியில் இருந்து இந்த மாத இறுதியில் விலகுவார் என்று அன்சா செய்தி நிறுவனம் கூறுகிறது.
அவர் பதவி விலகுவதை வத்திக்கானின் பேச்சாளர் ஒருவர் பிரஞ்சு செய்தி நிறுவனம் ஒன்றிடம் உறுதி செய்துள்ளார்.
தனது கடமைகளை நிறைவேற்ற போதிய பலம் இல்லாத காரணத்தினால் தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.


