தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல - பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்! - Funbattileader
Headlines News :

Football News

World News

Home » » தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல - பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்!

தாஜ் மஹால் காதல் சின்னம் அல்ல - பழைய சிவன் கோவில், அதிர்ச்சி உண்மை அம்பலம்!


( S.Rajasegar ) காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச் சமாதிதான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன் கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

தாஜ் மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டு உள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி. என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.

ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.

இச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரியர்.

தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எந்தக் கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்து மும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.

தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான் - மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம்பெற்று இருக்கவில்லை.

ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கின்றார் பேராசிரியர் ஓக்.

தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக் கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.

பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாஜ் மஹால் - உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.

உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர்.
Share this article :

Advertise

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Funbattileader - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya