சனத் ஜெயசூர்யா நடிகையுடன் ரகசியமாக மூன்றாம் திருமணம் - Funbattileader
Headlines News :

Football News

World News

Home » » சனத் ஜெயசூர்யா நடிகையுடன் ரகசியமாக மூன்றாம் திருமணம்

சனத் ஜெயசூர்யா நடிகையுடன் ரகசியமாக மூன்றாம் திருமணம்


இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியா மூன்றாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.
இத்திருமணம் கல்கிசையில் உள்ள விகாரை ஒன்றில் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்றது.

ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்ட இத்திருமணத்தில் ஊடகங்களுக்குக்கூட அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கவில்லை.

மணமகள் மலீகா. எல்லோரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய விடயம் என்னவென்றால் இவர் மூன்றாவதாக தெரிவு செய்து உள்ள மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண் என்பதுதான். மலீகா ஒரு நடிகையும் ஆவார்.

அண்மையில் வெளியாகி ஒரு கலக்குக் கலக்கிய சுப்பர் சிக்ஸ் என்கிற சிங்கள திரைப்படத்தில் பவோடா சந்தீபனி, அருணி போன்ற பிரபல நடிகைகளுடன் நடித்து இருந்தார்.

சனத்தின் இரண்டாவது மனைவி சந்திரா. முன்னாள் விமானப் பணிப் பெண். இருவருக்கும் மூன்று சிறுவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் விவாகரத்துக் கோரி வழக்கிட்டு இருந்தார். வழக்கு நடவடிக்கைகள் இன்னும் முடிவடைந்து விடவில்லை. சனத்தின் முதல் மனைவியும் விமானப் பணிப் பெண்தான் என்பது குறிப்பிடத்தக்கது.




Share this article :

Advertise

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Funbattileader - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya