ஒருநாள் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி சாதனை - Funbattileader
Headlines News :

Football News

World News

Home » » ஒருநாள் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி சாதனை

ஒருநாள் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி சாதனை


சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை மகளிர் கிரிகெட் அணி பெற்றுள்ளது. 

இந்திய மகளிர் அணியுடனான இன்றைய போட்டியின் போதே இலங்கை மகளிர் அணி இந்த சாதனை ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இலங்கை மகளிர் அணி இன்றைய போட்டியில் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இந்திய மகளிர் அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியில் திபிகா ரசங்கிக கூடிய ஓட்டங்களாக 84 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணி சற்று முன்னர் வரை 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
Share this article :

Advertise

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Funbattileader - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya